BIG BREAKING: அதிகாலையில் அதிரடி கைது… முதல்வர் விஜய்யின் ஆட்டம் ஆரம்பம்..!!

By Soundarya on வைகாசி 19, 2026

Spread the love

காஞ்சிபுரம் இரட்டைக்கொலை வழக்கு தொடர்பாக இரண்டு சிறார்கள் உட்பட 7 பேரை மணிமங்கலம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தைச் சேர்ந்த கானா பாடகர்களான பரத் மற்றும் சீனு ஆகிய இருவர், நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்க உடனடியாகத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இக்கொலை வழக்குத் தொடர்பாகத் தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், தப்பியோடிய 2 சிறார்கள் உட்பட 7 பேர் இன்று அதிகாலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, குற்றச் சம்பவங்களுக்கு எதிராகத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் அதிரடி ஆட்டம் ஆரம்பமாகிவிட்டதாகத் தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) சமூக ஊடகமான ‘X’ தளத்தில் இச்செய்தியைப் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.