திருச்சியில் கொடூரம்..! பூங்காவில் காதலியின் கழுத்தை நெரித்து.. முகத்தை கல்லால் சிதைத்த காதலன்.. ஐசியூவில் இளம்பெண் அனுமதி..!!

By Soundarya on வைகாசி 18, 2026

Spread the love

திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலை பூங்காவில் அமலா வெர்ஜினா என்ற இளம் பெண், அவரது காதலன் நவீன் என்பவரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நவீன், அமலாவின் கழுத்தை அவர்து துப்பட்டாவாலேயே இறுக்கி, அருகில் கிடந்த பெரிய கல்லால் அவரது முகத்தில் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

அமலாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அங்கிருந்த பொதுமக்கள், நவீனைத் தப்பியோட விடாமல் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நவீனை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கரத் தாக்குதலில் முகத்தில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த அமலா வெர்ஜினா, மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.