அதிர்ச்சி: தமிழகத்தில் மீண்டும் உயர்கிறதா மின்கட்டணம்..? அமைச்சர் அவசர ஆலோசனை..!!

By Soundarya on வைகாசி 18, 2026

Spread the love

தமிழ்நாட்டில் 2022-27 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு, மத்திய அரசின் உதய் மின் திட்ட ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) பணவீக்கத்தின் அடிப்படையில் மின்கட்டணத்தை மாற்றியமைக்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டிற்கான மின்கட்டண திருத்தம் மற்றும் மின்வாரியத்தின் நிதி நிலை குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம், மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் மின்வாரிய உயர் அதிகாரிகள் முன்னிலையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளில் பணவீக்கத்தின் விகிதப்படி மின்கட்டணம் உயர்த்தப்பட்ட போதும், பொதுமக்கள் மற்றும் வீட்டுப் பயனாளர்களின் நலன் கருதி அந்த கூடுதல் பாரத்தை அரசே மானியமாக ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, தமிழகத்தில் வீடுகளுக்கு அடுத்த இரு மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் புதிய திட்டம் அண்மையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், வரவிருக்கும் ஜூலை மாத மின்கட்டண உயர்வினால் ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையை கடந்த ஆண்டுகளைப் போல தமிழக அரசே மானியமாக ஏற்குமா, அல்லது நுகர்வோர் செலுத்த வேண்டியிருக்குமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பின்பே முழுமையாகத் தெரியவரும். இந்த மின் கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவுகள் மற்றும் புதிய கட்டண விகிதங்கள் குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விரைவில் விரிவான அரசாணையை வெளியிட உள்ளது.