தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்.. அரசின் அதிரடி உத்தரவு.. ஆசிரியர்களுக்கு பறந்த எச்சரிக்கை…!

By Nanthini on வைகாசி 18, 2026

Spread the love

நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தனிப்பயிற்சி அளிக்கும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அலுவலர்கள் (CEO) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இந்த சிறப்பு வகுப்புகள் நடைபெறும் நாட்களில் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயமாகப் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

   

மேலும், இந்த உத்தரவை மீறி பள்ளிக்கு வருகை தராத மற்றும் அலட்சியமாகச் செயல்படும் ஆசிரியர்கள் மீது கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, தோல்வியடைந்த மாணவர்கள் தங்களின் தன்னம்பிக்கையை மீட்டு, அடுத்து வரும் துணைத்தேர்வில் எளிதாக வெற்றி பெற ஒரு நல்வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.