CM விஜய் ரத்து செய்தார்… இரவோடு இரவாக திடீர் முடிவு…. வெளியான அறிவிப்பு…!

By Nanthini on வைகாசி 18, 2026

Spread the love

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய், கேரளாவில் புதிய முதலமைச்சராக வி.டி. சதீசன் பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காகத் திட்டமிட்டிருந்த தனது கேரளப் பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பயண ரத்திற்குப் பின்னணியில், அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவிருப்பதுதான் முக்கியக் காரணம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக, ஒரு மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்பவர்கள், மரியாதை நிமித்தமாகத் தலைநகர் டெல்லிக்குச் சென்று நாட்டின் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரை முதலில் சந்தித்துப் பேசுவது நீண்டகால மரபாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வழக்கத்தின்படி, தற்போது வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும் பிரதமர் மோடி இந்தியா திரும்பியவுடன், முதலமைச்சர் விஜய் டெல்லி சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறவும், தமிழக நலன்கள் குறித்து ஆலோசிக்கவும் திட்டமிட்டுள்ளதால், இந்த திடீர் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது.