சமைக்கும் முன் சிக்கனை கழுவுகிறீர்களா?… உங்கள் குடும்பத்திற்கே ஆபத்து… CDC எச்சரிக்கை..!!

By Muthu Mani on வைகாசி 17, 2026

Spread the love

சமைக்காத சிக்கனில் சால்மோனெல்லா, கேம்பிலோபாக்டர் போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் உள்ளன. இவற்றைத் தண்ணீரில் கழுவுவதால் கிருமிகள் அழிவதில்லை; மாறாக, குழாய் தண்ணீரில் கழுவும்போது அந்த நீர் துளிகள் மூலம் பாக்டீரியாக்கள் ஒரு மீட்டர் தூரம் வரை சிதறி, கிச்சன் மேற்பரப்பு, பாத்திரங்கள் மற்றும் அருகில் உள்ள உணவுகளில் பரவுகின்றன. இதனால் கிச்சன் சிங்க் பகுதியும் மாசுபட்டு, அங்கு கழுவப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் மூலமாக ‘ஃபுட் பாய்சன்’ ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்று அமெரிக்காவின் சிடிசி (CDC) எச்சரிக்கிறது.

இந்தக் கிருமிகளை அழிக்க சிக்கனைத் தண்ணீரில் கழுவுவதற்குப் பதிலாக, நேரடியாக 165 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் நன்கு வேகவைப்பதே மிகச்சிறந்த வழியாகும். ஏனெனில், அதிக வெப்பத்தில் சமைக்கும்போது மட்டுமே அதில் இருக்கும் அனைத்து பாக்டீரியாக்களும் முழுமையாக அழிகின்றன. ஒருவேளை சிக்கனை கழுவ வேண்டிய கட்டாயம் இருந்தால், தண்ணீர் வெளியில் எங்கும் தெறிக்காதவாறு ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி மெதுவாகக் கழுவ வேண்டும்.

   

இறைச்சியைக் கையாண்ட பிறகு, கைகளை சோப்பு போட்டு 20 வினாடிகள் நன்றாகக் கழுவ வேண்டும். மேலும், இறைச்சிக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் கட்டிங் போர்டுகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துவது அவசியமாகும். சிக்கனை தவறான முறையில் கழுவுவது குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கே ஆபத்தாக முடியலாம் என்பதால், அதனைப் பாதுகாப்பான முறையில் கையாள்வது பல்வேறு நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.