“கொரியன் பாய் பிரண்ட்.. மாசம் ஒரு வெளிநாட்டு டூர்!”… மேடையிலேயே பெற்றோருக்கு வெடிகுண்டு வைத்த இளம்பெண்… ஆவுடையப்பனை அதிர வைத்த பதில்…!!!

By Muthu Mani on வைகாசி 16, 2026

Spread the love

தற்போது தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி விவாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து பல வருடங்களாக முதலிடத்தில் உள்ளது. இதே போன்று மற்றொரு பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ‘தமிழா தமிழா’ என்ற ரியாலிட்டி விவாத நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது இதனை பிரபல ஊடகவியலாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் வாரந்தோறும் சமூகத்திற்குத் தேவையான சுவாரஸ்யமான ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த வாரம் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் “காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்பும் பிள்ளைகள் மற்றும் பயத்தில் பெற்றோர்கள்” என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்படுகிறது. இதில் ஒரு சுவாரஸ்யமான திருப்பமாக, தங்களுக்குள் காதல் திருமணம் செய்து கொண்ட சில பெற்றோர்களே, தற்போது தங்களது பிள்ளைகளின் காதல் திருமண முடிவுக்கு எதிராக விவாதித்து பயத்தை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், பிள்ளைகளோ எதைப் பற்றியும் கவலைப்படாமல், தாங்கள் பிடிவாதமாகத் தான் விரும்பியவரையே காதல் திருமணம் செய்து கொள்வோம் என்று பெற்றோர்களுக்கு இணையாக மேடையில் வாதிடுகின்றனர்.

   

இந்த விவாதத்தின் போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம் பெண் ஒருவர், தான் ஒரு கொரியன் நாட்டைச் சேர்ந்த இளைஞரை காதலிப்பதாகக் கூறி அரங்கத்தையே அதிர வைத்தார். மேலும், அவர் தனது காதலருடன் மாதம் ஒருமுறை வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்று வருவதாகவும் வெளிப்படையாகப் பேசினார். இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த தொகுப்பாளர் ஆவுடையப்பன், அந்தப் பெண்ணின் துணிச்சலான பதிலைக் கையாண்டு, “இங்கு இருக்கிற இந்திய பெற்றோருக்குப் பெரிய வெடிகுண்டை வீசுறியேமா!” என்று நகைச்சுவையாகவும் வியப்பாகவும் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.