BREAKING: EPS பெயர் நீக்கம்.. அதிமுகவில் அடுத்த ஷாக்.. உச்சக்கட்ட பரபரப்பு…!

By Nanthini on வைகாசி 16, 2026

Spread the love

அதிமுகவில் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கு இடையேயான அதிகார மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது, கட்சி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளிப்பாடாக, அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’வின் நிறுவனர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமியின் பெயர் அதிரடியாக நீக்கப்பட்டு, இன்று அந்த இடத்தில் எஸ்.பி. வேலுமணியின் பெயர் அச்சிடப்பட்டு வெளியானது கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமின்றி, எடப்பாடி பழனிசாமியால் அண்மையில் நியமிக்கப்பட்ட புதிய மாவட்டச் செயலாளர்களை எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பினர் ஏற்க மறுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், பல மாவட்டங்களில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே நேரடி மோதல்களும், உட்கட்சிப் பூசல்களும் வெடித்து அதிமுகவை தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது.