உஷார்..! உணவக QR கோடில் ஒளிந்திருக்கும் ஆபத்து.. ஹோட்டலில் அரங்கேறிய சம்பவம்.! இளம்பெண்ணை அலறவிட்ட ஊழியரின் வாட்ஸ்அப் மெசேஜ்..!!

By Soundarya on வைகாசி 16, 2026

Spread the love

புனேவில் உள்ள பிரபல ‘சோஷியல்’ (Social) உணவகத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பிரபல இன்ஃப்ளூயன்ஸரான ரிஷிகா தத்தா என்பவர், அங்குள்ள மேஜையில் இருந்த QR கோடை உணவக மெனுவைப் பார்ப்பதற்காக ஸ்கேன் செய்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக, அவர் ஸ்கேன் செய்த அடுத்த கணமே அவருடைய தனிப்பட்ட மொபைல் எண் உணவக ஊழியர்களின் கைக்குச் சென்றுள்ளது. டிஜிட்டல் வசதி என்ற பெயரில் நமது தனியுரிமை எந்த அளவிற்கு ஆபத்தில் உள்ளது என்பதற்கு இதுவொரு சான்றாகும்.

தனது கைக்கு எண் கிடைத்தவுடன், அந்த உணவக ஊழியர்களில் ஒருவன் ரிஷிகாவிற்கு வாட்ஸ்அப்பில் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகளை (Messages) அனுப்பத் தொடங்கியுள்ளான். ஒருகட்டத்தில் வரம்பு மீறி, சாட்டில் அவளது வயதையும் கேட்டுள்ளான். இதுகுறித்து ரிஷிகா கூறுகையில், “நல்லவேளையாக அவனுக்கு என் வீட்டு முகவரி தெரியவில்லை, தெரிந்திருந்தால் என் வீட்டு வாசலுக்கே வந்திருப்பான்” என்று பயத்துடன் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

   

இந்த விவகாரம் குறித்து ரிஷிகா உடனடியாக உணவக நிர்வாகத்திடம் புகார் அளித்தார். புகாரை அடுத்து, உடனடியாகச் செயல்பட்ட உணவக நிர்வாகம் அந்த ஒழுங்கீனமான ஊழியரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தற்பொழுது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் உணவகங்களுக்குச் செல்லும்போது அவசரப்பட்டு QR கோடுகளை ஸ்கேன் செய்வதற்கு முன்னால், நமது பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்து சிந்திப்பது அவசியம் என்பதை இது உணர்த்துகிறது.