பெரும் அதிர்ச்சி..! முதல்வர் விஜய்யின் ஆலோசகருக்கு சாதிக்கொடுமை… ஜோதிடர் ரதன் பண்டிட் உருக்கம்..!!

By Soundarya on வைகாசி 16, 2026

Spread the love

தமிழக முதலமைச்சர் விஜய்யின் ஆலோசகரும் பிரபல ஜோதிடருமான ராதன் பண்டிட், தான் சிறுவயதில் எதிர்கொண்ட சாதிக்கொடுமைகள் குறித்துப் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தான் வறுமையிலும் சாதிய ஒடுக்குமுறையிலும் பெரிதும் பாதிக்கப்பட்டு வளர்ந்ததாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தான் சிறுவனாக இருந்தபோது, தனது தந்தையுடன் வீதியில் நடந்து செல்லும்போது எதிரில் ஒரு உயர்சாதிக்காரர் வந்துவிட்டால், தாங்கள் ஒதுங்கிப் போக வேண்டும் என்ற கட்டாயம் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு ஒதுங்கிப் போகாமல் அவர்களைக் கடந்து (கிராஸ் பண்ணி) சென்றால் தங்களுக்கு அடி விழும் என்ற கசப்பான உண்மை நிலையைத் தனது பேட்டியின் மூலம் ராதன் பண்டிட் வெளிப்படுத்தியுள்ளார்.