விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு அமைச்சர் பதவியா..? தவெக அமைச்சரவையில் புதிய திருப்பம்..!!

By Swetha on வைகாசி 16, 2026

Spread the love

தமிழக அரசியல் சூழலில், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றி கழகம் (தவெக) புதிய ஆட்சியை அமைத்துள்ளது. இந்த புதிய அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல்.திருமாவளவனுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரவலாக எழுந்து வருகிறது.

கடந்த தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தொல்.திருமாவளவன் போட்டியிடுவார் என்று முதலில் அறிவிக்கப்பட்ட போதிலும், பின்னர் அவருக்குப் பதிலாக வேறொரு வேட்பாளர் நிறுத்தப்பட்டு வெற்றியும் பெற்றுள்ளார். தற்போது அவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாத நிலையிலும், அவரை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்பதில் தவெக தலைமை ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

   

தொல்.திருமாவளவன் போன்ற மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவர் அமைச்சரவையில் இடம்பெற்றால், புதிய அரசு இன்னும் சிறப்பான முறையிலும், சமூக நீதியோடும் செயல்பட முடியும் என தவெக தரப்பில் நம்பப்படுவதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, அவர் விரைவில் அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கான அரசியல் நகர்வுகள் மற்றும் விவாதங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன.