BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்… தமிழக மக்களே அலெர்ட்..!!

By Swetha on வைகாசி 15, 2026

Spread the love

தென்மேற்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளதால் தமிழகத்தில் பரவலாகக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று நீடிப்பதால், கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மழை தீவிரமடையக் கூடும். குறிப்பாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்திற்குத் தொடர் மழை நீடிக்க வாய்ப்புள்ளது. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் நீர்நிலைகளின் அருகில் வசிப்பவர்கள் தகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கடல் சீற்றத்துடன் காணப்பட வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.