கொழுந்தன் மீது மோகம்… தடையாக இருந்த கணவன்… ₹1 லட்சம் கொடுத்து கூலிப்படை ஏவி மனைவி போட்ட பக்கா ஸ்கெட்ச்.. நடுங்க வைக்கும் பின்னணி…!!!

By Muthu Mani on வைகாசி 15, 2026

Spread the love

தனது கொழுந்தன் மீது கொண்ட அதீத காதலால், குறுக்கே நின்ற கணவனை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கூலிப்படை மூலம் கொலை செய்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது கொழுந்தனுடன் ரகசியத் தொடர்பில் இருந்ததை அவரது கணவர் நேரில் கண்டு பிடித்துள்ளார். இதனால் வீட்டில் பெரிய அளவில் வாக்குவாதம் வெடித்ததுடன், ஆத்திரமடைந்த மனைவி தனது கணவனுக்கு அன்றே கொலை எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

மனைவியின் மிரட்டலை அந்த நபர் சாதாரணமாக எடுத்துக் கொண்டதே அவருக்கு வினையாக முடிந்தது. காதலுக்கு கணவன் தடையாக இருப்பதாகக் கருதிய அந்தப் பெண், எப்படியாவது அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்காகத் தனது கிராமத்தைச் சேர்ந்த முகமது ஷாகின் என்பவனிடம் ஒரு லட்சம் ரூபாயைச் ‘சுபாரி’ (கொலைக்கான ஒப்பந்தத் தொகை) கொடுத்து தனது கணவனைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.

   

திட்டமிட்டபடி கூலிப்படையினர் கணவனைக் கொன்று முடித்தனர். கள்ளக்காதலுக்காகத் தனது தாலியை அறுத்த கணவனைத் தீர்த்துக்கட்டிய பெண்ணின் இந்தச் செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர்.