அதிமுகவில் அடுத்த விக்கெட் அவுட்… முக்கிய பொறுப்பில் இருந்து  திடீர் விலகல்… காலையிலேயே இபிஎஸ்-க்கு ஷாக்…!

By Nanthini on வைகாசி 15, 2026

Spread the love

அதிமுகவின் முக்கிய ஊடக முகமாகவும், ‘நமது அம்மா’ நாளிதழின் ஆசிரியராகவும் அறியப்பட்ட மருது அழகுராஜ் (கல்யாண சுந்தரம்), தற்போது தனது பொறுப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களுக்கு மத்தியில், நாளிதழின் நிர்வாகப் பொறுப்புகள் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் கைக்கு மாறியதைத் தொடர்ந்து இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் தீவிர விசுவாசியாகக் கருதப்படும் அவர், தனது விலகல் குறித்து ‘X’ தளத்தில் பதிவிடுகையில், இத்தனை காலம் தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். ஊடகத் துறையில் அதிமுகவின் குரலாக ஓங்கி ஒலித்த ஒரு முக்கிய நிர்வாகி வெளியேறியிருப்பது அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.