BREAKING: காலையிலேயே ஷாக்… நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது…!

By Nanthini on வைகாசி 15, 2026

Spread the love

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், அதன் நேரடித் தாக்கமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தியுள்ளன. இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ₹3.14 மற்றும் டீசல் லிட்டருக்கு ₹3.11 என விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த சில தினங்களாகவே மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆகியோர் உலகளாவிய பொருளாதாரச் சூழல் குறித்து சூசகமாகத் தெரிவித்து வந்த நிலையில், தற்போது இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளதே இந்த விலை ஏற்றத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படும் வேளையில், இது அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும் என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.