அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..! 58%-லிருந்து 60%-ஆக உயர்வு… முதல்வர் விஜய் அறிவிப்பு..!!

By Soundarya on வைகாசி 14, 2026

Spread the love

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை (DA) 58%-லிருந்து 60%-ஆக உயர்த்தி முதலமைச்சர் ஜே. விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த 2 சதவீத அகவிலைப்படி உயர்வு, கடந்த ஜனவரி 1, 2026 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி முடிவின் மூலம் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் என சுமார் 16 லட்சம் பேர் நேரடியாகப் பயனடைவார்கள். இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ₹1,230 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றபோதிலும், ஊழியர்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த நிதி ஒதுக்கீட்டை அரசு வழங்கியுள்ளது