அடுத்த ‘ஜெயலலிதா’ இவர்தான்? திரிஷாவின் அரசியல் என்ட்ரி?.. அவரே கொடுத்த அந்த ‘ஓபன்’ ஸ்டேட்மென்ட்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

By Muthu Mani on வைகாசி 14, 2026

Spread the love

மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்த திரிஷாவுக்கு ‘லேசா லேசா’ படம் மூலம் வாய்ப்புகள் கிடைத்தாலும், ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலமே திரையுலகில் கால் பதித்தார். தொடக்கத்திலேயே ‘சாமி’, ‘கில்லி’ எனப் பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்து குறுகிய காலத்திலேயே தென்னிந்திய சினிமாவின் கனவுக்கன்னியாக உயர்ந்தார். இடையில் சில சறுக்கல்கள் ஏற்பட்டாலும், ‘96’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய மெகா ஹிட் படங்கள் மூலம் மீண்டு வந்து இன்றும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’, ‘தக் லைஃப்’ எனப் பெரிய பட்ஜெட் படங்களில் பிஸியாக நடித்து வரும் வேளையில், அவரது பெயர் சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சூழலில், அவருக்கும் திரிஷாவுக்குமான நட்பு குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளன. விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ளதாகக் கூறப்படும் தகவல்களும், அதில் ஒரு நடிகை பற்றிய குறிப்புகள் இருந்ததாகப் பரவும் செய்திகளும் திரிஷாவின் பெயரைச் சுற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

   

விஜய்யின் பதவியேற்பு விழாவில் திரிஷாவுக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதும், அவர் அங்கு உணர்ச்சிவசப்பட்டு அமர்ந்திருந்ததும் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளானது. இதனைத் தொடர்ந்து, திருச்சி கிழக்குத் தொகுதியில் திரிஷாவை விஜய் களம் இறக்குவார் என்றும், அவர் தமிழக அரசியலின் ‘அடுத்த ஜெயலலிதா’வாக உருவெடுப்பார் என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய் முதலமைச்சரான பிறகு திரிஷாவுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இத்தகைய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

   

இருப்பினும், அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு திரிஷா ஏற்கனவே தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். ஒரு பழைய பேட்டியில் அவர் கூறுகையில், “அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை; அது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்பதால் அதில் என்னால் எதுவும் செய்ய முடியாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தற்போதையச் சூழலில் அவரைப் பற்றி வெளியாகும் செய்திகள் வதந்தியா அல்லது நிஜமாகவே அரசியலில் இறங்குவாரா என்பது காலப்போக்கில் தான் தெரியவரும்.