டெல்லி ஏர்போர்ட்டின் ‘செல்லப்பிள்ளை’ காணோம்..! பல நாள் தேடலுக்குப் பின் கிடைத்த ‘குட் நியூஸ்’ – இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

By Swetha on வைகாசி 13, 2026

Spread the love

தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் (IGI) தரைத்தளப் பகுதியில் நீண்ட காலமாக வசித்து வந்த ‘கடு’ என்ற தெருநாய், அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பயணிகளின் அன்புக்குரிய ஒன்றாக மாறியிருந்தது. சமீபத்தில் இந்த நாய் திடீரென காணாமல் போனது விமான நிலைய ஊழியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. கடுவை யாரோ கடத்திச் சென்றுவிட்டதாகவோ அல்லது வழிதவறிச் சென்றிருக்கலாம் என்ற அச்சத்தில், அதனைத் தேடும் பணி சமூக வலைதளங்களில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.

கடுவைத் தேடுவதற்காக ‘Missing’ போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலாகின. பல நாட்களாகத் தேடி வந்த நிலையில், தில்லி துவாரகா (Dwarka) பகுதியில் கடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தன்னார்வலர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்களின் முயற்சியால், அது பத்திரமாக மீட்கப்பட்டது. கடு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி, விமான நிலைய ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

https://www.instagram.com/reel/DYP995XzItQ/?utm_source=ig_web_copy_link

   

தற்போது கடு மீட்கப்பட்டு மீண்டும் அதன் இடத்திற்கே கொண்டு வரப்படும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பல நாட்களுக்குப் பிறகு தனது பழைய நண்பர்களைக் கண்ட மகிழ்ச்சியில் கடு வாலாட்டும் காட்சிகள் காண்போரை நெகிழச் செய்கின்றன. ஒரு தெருநாய் மீது தில்லி விமான நிலைய ஊழியர்கள் காட்டிய இந்த அதீத அன்பு, இணையவாசிகளின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.