தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தில், முதலமைச்சர் விஜய் அவர்கள் 144 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தனது பெரும்பான்மையை அதிரடியாக நிரூபித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அணியைச் சேர்ந்த 22 பேர் வாக்களித்த நிலையில், பாமக மற்றும் பாஜகவைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
முன்னதாக, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்த சூழலில், எவ்வித தடையுமின்றி “144” என்ற பெரும்பான்மை பலத்துடன் தவெக அரசு தனது பலத்தை உறுதிப்படுத்தி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.
