குடிமகன்களுக்கு அடுத்த ஷாக்… தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் இனி… CM விஜய் அதிரடி உத்தரவு…!

By Nanthini on வைகாசி 13, 2026

Spread the love

தமிழகத்தில் மதுவிலக்கை நோக்கிய ஆக்கப்பூர்வமான நகர்வாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வரும் மதுக்கடைகளை, இரண்டு மணி நேரம் முன்னதாகவே, அதாவது இரவு 8 மணிக்கே மூடுவதற்கு அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களில் 717 டாஸ்மாக் கடைகளை மூட அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 750 கடைகளை மூடுவதற்கான கள ஆய்வுகளும் ஆய்வுப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மது அரக்கனிடமிருந்து மக்களைக் காக்கும் நோக்கில், படிப்படியான மதுவிலக்கை அமல்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டு வரும் இந்த தொடர் நடவடிக்கைகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.