நாடே அதிர்ச்சி..! ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள்… டெலிகிராமில் வாங்கிய மருத்துவ மாணவர் சிக்கினார்..!!

By Swetha on வைகாசி 13, 2026

Spread the love

மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்தது ஆதாரங்களுடன் உறுதியானதை அடுத்து, அத்தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை (NTA) அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய சிபிஐ, மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் சுபம் கெர்னர் என்பவரைக் கைது செய்துள்ளது. டெலிகிராம் செயலி வாயிலாக சுமார் ₹10 லட்சத்திற்கு வினாத்தாள் கைமாறியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடைய மற்ற நபர்களைப் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. தேர்வு முறைகேடு கண்டறியப்பட்டதையடுத்து, மாணவர்களின் நலன் கருதி முறையான மற்றும் நேர்மையான முறையில் தேர்வை மீண்டும் நடத்த NTA முடிவு செய்துள்ளது. விரைவில் இதற்கான மறுதேர்வு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று NTA இயக்குநர் தெரிவித்துள்ளார். முறைகேடுகளைத் தவிர்க்க அடுத்தமுறை கூடுதல் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படும் எனவும் கல்வி அமைச்சகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.