BREAKING: இரவோடு இரவாக கட்சியிலிருந்து விலகிய முக்கிய புள்ளி… அதிர்ச்சியில் எடப்பாடி..!!

By Soundarya on வைகாசி 13, 2026

Spread the love

அதிமுகவின் கோவை (தெற்கு) மாவட்ட முக்கிய நிர்வாகியும், சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான வி.பி. கந்தவேல், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கோவை மாவட்ட நிர்வாகியின் இந்த திடீர் முடிவு எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியில் தான் ஒரு உண்மைத் தொண்டனாகப் பணியாற்றியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அண்மையில் நடந்த தேர்தலுக்குப் பிறகு அரங்கேறும் நிகழ்வுகள் தனக்கு மிகுந்த மன உளைச்சலையும் வேதனையையும் தருவதாகத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே கட்சியை விட்டு விலகும் முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கியுள்ளார்.

   

வி.பி. கந்தவேல் தனது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்ட அதிமுகவில் நிலவும் இந்த உட்கட்சி விவகாரம் மற்றும் முக்கிய நிர்வாகியின் விலகல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.