BREAKING: ​நீட் UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்.. சிபிஐ அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை..!!

By Soundarya on வைகாசி 12, 2026

Spread the love

நீட் (NEET UG) தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI) அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மே 3-ஆம் தேதி நடத்தப்பட்ட இத்தேர்வில், வினாத்தாள்கள் முன்னதாகவே சட்டவிரோதமாகப் பகிரப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை அளித்த எழுத்துப்பூர்வமான புகாரின் அடிப்படையில் சிபிஐ இந்த அதிரடி விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சன் நியூஸ் வெளியிட்டுள்ள இந்தத் தகவலின்படி, முறைகேட்டில் ஈடுபட்டவர்களைக் கண்டறியவும், தேர்வுக் கட்டுப்பாட்டு அமைப்பில் உள்ள ஓட்டைகளை ஆய்வு செய்யவும் சிபிஐ தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான விஷயம் என்பதால், முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.