Breaking: விஜய்க்கு ஆதரவு கிடையாது… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்…!!!

By Swetha on வைகாசி 12, 2026

Spread the love

‘தமிழக வெற்றிக் கழகத்திற்கு’ (தவெக) எதிராக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி (EPS) தரப்பு களம் இறங்கியுள்ளது. சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக-விற்கு எதிராகவே வாக்களிப்போம் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ். மணியன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். “தூய்மையான ஆட்சி” என்று பேசும் விஜய், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார் என்றும் அவர் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேட்டியின் போது குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களைப் பொறுத்தவரை, சுமார் 47 சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியைத் தங்கள் சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கக் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேசமயம், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருவதாகவும் ஓ.எஸ். மணியன் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். இந்தத் திடீர் திருப்பம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.