BREAKING: முதல்வர் விஜயின் அடுத்த அதிரடி… சற்றுமுன் பரந்த உத்தரவு…!

By Muthu Mani on வைகாசி 12, 2026

Spread the love

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய், கோடைக்காலத்தில் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்த கையோடு, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய அவர், தற்போது செயல்பாட்டில் உள்ள பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்களின் நிலை குறித்து விரிவாகக் கேட்டறிந்தார். விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு மாவட்ட ஆட்சியர்களுக்குப் பிறப்பிக்கும் முதல் அதிகாரப்பூர்வ உத்தரவு இது என்பதால், இது நிர்வாக ரீதியாகவும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.