BREAKING: அடுத்த ஷாக்… திமுக – அதிமுக கூட்டணி பேச்சு.. சற்றுமுன் திருமாவளவன் பரபரப்பு பேட்டி…!

By Nanthini on வைகாசி 12, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக – அதிமுக கூட்டணி குறித்த விவகாரத்தில், விசிக தலைவர் திருமாவளவனின் சமீபத்திய பேச்சு அனலை கிளப்பியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பரிந்துரை திமுக தரப்பிலிருந்தே முன்வைக்கப்பட்டதாகக் கூறி அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில், அவர்களது பரிந்துரையைத் தங்களால் எளிதில் புறக்கணிக்க முடியாது என்றும் அவர் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, திமுகவின் ஆர்.எஸ்.பாரதி இத்தகைய கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் எவையும் நடைபெறவில்லை எனத் திட்டவட்டமாக மறுத்திருந்த நிலையில், தற்போது திருமாவளவன் அதனை உறுதிப்படுத்தும் வகையில் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இக்கருத்துக்கள் தற்போதைய கூட்டணி உறவுகளில் புதிய சலசலப்பை உருவாக்கியுள்ளன.