புதுக்கோட்டை மத்திய மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினர் சரவணன், தொழிலதிபர்கள் மற்றும் மருத்துவர்களிடம் அதிக லாபம் தருவதாகக் கூறி சுமார் ₹20 கோடி வரை மோசடி செய்த புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த 49 பேர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள சூழலில், அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகியே இத்தகைய மெகா மோசடியில் ஈடுபட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி திமுக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருவது தவெக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
