சீல் பிரிக்காத பாட்டிலில் பல்லி வந்தது எப்படி? பிரபலமான குளிர்பான நிறுவனத்தின் அலட்சியம் – வீடியோ ஆதாரத்துடன் அம்பலம்..!!

By Swetha on வைகாசி 12, 2026

Spread the love

சீலிடப்பட்ட தம்ஸ் அப் குளிர்பான பாட்டிலுக்குள் செத்த பல்லி ஒன்று கிடந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், பாட்டிலின் மூடி பிரிக்கப்படாத நிலையிலேயே அதன் உள்ளே ஒரு பெரிய பல்லி மிதப்பதைக் காண முடிகிறது. இந்த விபரீதத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், இதனை வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ பரவத் தொடங்கியதிலிருந்து, நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பிரபலமான குளிர்பான நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு முறைகளில் இவ்வளவு மெத்தனமாக இருப்பது எப்படி என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். உணவுக் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுத்தமான மற்றும் பாதுகாப்பான உணவைப் பெறுவது அடிப்படை உரிமை என்றாலும், இது போன்ற நிகழ்வுகள் பிராண்டட் பொருட்களின் மீதான நம்பிக்கையைச் சிதைப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சுகாதாரமற்ற குளிர்பானங்களை உட்கொள்வதால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதால், பாட்டில்களை வாங்கும் போது பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்