அடுத்த பரபரப்பு..! “தவெகவுடன் கூட்டணி பிடிக்கவில்லை” பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் முக்கிய புள்ளி..!

By Soundarya on வைகாசி 12, 2026

Spread the love

வேலூர் மாவட்ட ஊராட்சி குழுவில் மொத்தம் 14 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், 8-வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கிருஷ்ணவேணி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தார்.

தற்போது தமிழக அரசியல் சூழலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளதைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி தனது பதவியை நேற்று முறைப்படி ராஜினாமா செய்துள்ளார்.