வெடித்தது மோதல்..! ஸ்டாலினை தோற்கடிக்க எனக்கு அங்கீகாரம் கிடையாதா..? தவெக MLA வி.எஸ். பாபு அதிருப்தி..!

By Soundarya on வைகாசி 11, 2026

Spread the love

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வி.எஸ். பாபு மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார். ஒரு முக்கிய அரசியல் தலைவரை வீழ்த்தியவர் என்பதால், அமையவிருக்கும் புதிய அமைச்சரவையில் வி.எஸ். பாபுவுக்கு மிக முக்கியமான துறை ஒதுக்கப்படும் என்று அரசியல் வட்டாரங்களிலும் கட்சியினரிடையேயும் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள 9 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியலில் வி.எஸ். பாபுவின் பெயர் இடம் பெறாதது அவருக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “முன்னாள் முதலமைச்சரையே வீழ்த்திய எனக்கு தகுந்த அங்கீகாரம் இல்லையா? அமைச்சரவையில் ஏன் இடம் அளிக்கப்படவில்லை?” என்ற ஆதங்கத்துடன் அவர் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவையில் இடம் கிடைக்காதது குறித்து அவர் தனது ஆதரவாளர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

   

இருப்பினும், சாதி மற்றும் மண்டல வாரியான சமநிலையை கருத்தில் கொண்டே அமைச்சரவை பட்டியல் இறுதி செய்யப்பட்டதாக கட்சித் தலைமை தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது. வி.எஸ். பாபுவை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டுள்ள நிலையில், அவருக்குக் கட்சியில் ஏதேனும் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் அல்லது வருங்காலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்போது வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.