அதிமுகவில் பிளவு… இபிஎஸ் தலையில் இறங்கிய இடி… சற்றுமுன் பரபரப்பை கிளப்பிய EX அமைச்சர்…!

By Swetha on வைகாசி 11, 2026

Spread the love

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் இருவேறு குழுக்களாகப் பேரவைக்குச் சென்றது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சியில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா விளக்கம் அளித்துள்ளார்.

இருப்பினும், இரு குழுக்களாகப் பிரிந்து சென்றது ஏன் மற்றும் எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் பேசாமல் இருந்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்து அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அதிமுகவின் முக்கியத் தலைவர்களிடையே நிலவும் இந்த மௌனமும், பிரிந்து சென்ற நிகழ்வும் அக்கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் நிலவுகிறதோ என்ற சந்தேகத்தை அரசியல் வட்டாரத்தில் வலுவாக்கியுள்ளது.