ரயில் பயணிகளுக்குப் பெருத்த ஏமாற்றம்..! வெயிட்டிங் லிஸ்ட் கொடுமை.. ஸ்லீப்பர் கிளாஸில் மட்டும் 3.39 கோடி டிக்கெட்டுகள் ரத்து – RTI கொடுத்த ஷாக்…!

By Swetha on வைகாசி 11, 2026

Spread the love

இந்தியாவில் ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் பயணிகளில், காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களின் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படாவிட்டால், அவை தானாகவே ரத்து செய்யப்பட்டுவிடும். அந்த வகையில், கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும் சுமார் 3.39 கோடி பயணிகளின் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிப்பின் தீவிரத்தை நேர அடிப்படையில் கணக்கிட்டுப் பார்த்தால், இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் சராசரியாக 64 பயணிகள் தங்களது ரயில் பயண வாய்ப்பை இழக்கின்றனர். அதாவது, ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு பயணிக்கும் மேலாக ரயிலில் செல்ல முடியாமல் போகிறது. ஒரு நாளைக்குச் சராசரியாக 92,877 பயணிகள் இந்தச் சிக்கலை எதிர்கொள்கின்றனர்.

   

பல்வேறு பிரிவுகளில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டாலும், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயணிக்கும் ஸ்லீப்பர் கிளாஸ் பிரிவில்தான் அதிகபட்சமாக 1.68 கோடி டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக 3-ஏசி பிரிவில் 74.55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பண்டிகை மற்றும் கோடை விடுமுறை காலங்களில் நிலவும் அதீத தேவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது