மாறிய கட்சி… மாறாத விசுவாசம்..! ‘ஜெயலலிதா’ புகைப்படத்துடன் பதவியேற்ற செங்கோட்டையன்..!!

By Soundarya on வைகாசி 11, 2026

Spread the love

தமிழக அரசியலில் ஒரு முக்கிய மாற்றமாக, முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தனது சட்டப்பேரவை உறுப்பினர் (MLA) பதவியை ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை தனது சட்டைப் பையில் வைத்திருந்தபடி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. விஜய்யைத் தொடர்ந்து, மேலும் 9 அமைச்சர்கள் வரிசையாகப் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், செங்கோட்டையன் இந்தச் செயலின் மூலம் தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் செங்கோட்டையன், கடந்த காலங்களில் அதிமுகவின் முக்கியத் தூணாக விளங்கியவர். இருப்பினும், எடப்பாடி பழனிசாமியுடன் (EPS) ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது அவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள நிலையில், மாற்றுப் பாதையில் பயணித்தாலும் தனது பழைய அரசியல் அடையாளமான ஜெயலலிதா மீதான மரியாதையை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.