“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

By Swetha on வைகாசி 10, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜ்பால், ராக்கி என்ற இளம்பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், ராக்கி மற்ற இரண்டு இளைஞர்களுடன் அடிக்கடி பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பலமுறை ராஜ்பால் கண்டித்துள்ளார். ஆனால், ராக்கி அதைக் கேட்காமல் தொடர்ந்து பேசி வந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன.

ராஜ்பால் தன்னைத் தடுக்கும்போதெல்லாம், ராக்கி அவர் மீது ‘பாலியல் வன்கொடுமை’ (Rape Case) புகார் அளிக்கப்போவதாக மிரட்டியுள்ளார். இந்த மிரட்டலால் ஆத்திரமடைந்த ராஜ்பால், “நான் சிறைக்குச் சென்றால் பாலியல் வன்கொடுமைக்காகப் போகமாட்டேன், கொலைக் குற்றத்திற்காகத்தான் போவேன்” என்று ராக்கியை எச்சரித்துள்ளார். தான் சொன்னபடியே, கடந்த சில தினங்களுக்கு முன்பு ராக்கியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து தனது சபதத்தை நிறைவேற்றியுள்ளார்.

   

கொலை செய்த பிறகு, ராஜ்பால் எவ்வித பயமும் இன்றி நேராகக் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். காவல்துறையினரிடம் தான் செய்த கொலையை ஒப்புக்கொண்ட அவர், தனது காதலி மற்றவர்களுடன் பேசியதும், தன்னை மிரட்டியதுமே இதற்குக் காரணம் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். சட்டத்தைக் கற்க வேண்டிய மாணவனே, சட்டத்தைக் கையில் எடுத்து ஒரு பெண்ணின் உயிரைப் பறித்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் ராஜ்பாலைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.