தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் சோழவந்தன் தொகுதி எம்எல்ஏவான கருப்பையா தற்காலிக சபாநாயகராக (Pro-tem Speaker) அதிரடியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ள நிலையில், நாளை நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வில் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்எல்ஏக்களும் இவர் முன்னிலையிலேயே பதவியேற்க உள்ளனர்.
மேலும், புதிய ஆட்சியின் பலத்தை நிரூபிக்கும் மிக முக்கியமான நம்பிக்கை வாக்கெடுப்பின் போதும் இவரே சபாநாயகராகச் செயல்பட்டு அவையை வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
