தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நாளை பிற்பகல் 3:15 மணிக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இந்த பதவியேற்பு விழாவில் விஜய்யுடன் முதற்கட்டமாக 9 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர். திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்து மக்கள் ஆதரவுடன் அரியணை ஏறும் இந்த நிகழ்வு அவரது ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் எழும்பூர் ஸ்டேடியத்தில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
