“காதலனை கட்டிப்போட்டு கொடூரம்” காதலியைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை – பீகாரில் அரங்கேறிய பயங்கரம்..!!

By Swetha on வைகாசி 9, 2026

Spread the love

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குர்ஹானி பகுதியில், காதலனுடன் பேசிக்கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பெண் தனது காதலனுடன் தனிமையில் இருந்தபோது, அங்கு வந்த மூன்று நபர்கள் அவர்கள் இருவரையும் கத்தியைக் காட்டி மிரட்டி கடத்திச் சென்று இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவத்தின் போது, அந்த கும்பல் காதலனைத் தாக்கி கட்டிப்போட்டுவிட்டு, இளம் பெண்ணை ஒரு மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்று மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட அந்த கும்பல், அங்கிருந்து தப்பியோடியது. பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது காதலன் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

   

இந்தக் கொடூர சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் தொடர்புடைய ராகுல் குமார், சூரஜ் குமார் மற்றும் அங்கித் குமார் ஆகிய மூன்று பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்கொடுமைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.