BREAKING: விஜய்க்கு சிக்கல் தீர்ந்தது… ஆட்சி அமைக்கிறார்… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

By Nanthini on வைகாசி 9, 2026

Spread the love
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முடிவெடுத்துள்ளதாக என்.டி.டி.வி (NDTV) செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்கள் என்ற பெரும்பான்மை எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டு இடங்கள் மட்டுமே குறைவாக உள்ள நிலையில், விசிக-வின் இந்த ஆதரவு விஜய்க்கு மிகப்பெரிய பலமாக அமையும் எனக் கருதப்படுகிறது.

முன்னதாக, கூட்டணி மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரி விசிக பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது எவ்வித நிபந்தனையுமின்றி ஆதரவு அளிக்க முன்வந்திருப்பது அரசியல் அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முக்கிய முடிவை விசிக தலைவர் திருமாவளவன் இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.