தமிழகத்தின் 15 மாவட்டங்களில் வெடித்து வாங்கப்போகும் மழை… அக்னி நட்சத்திரத்தில் குளுகுளு அப்டேட்…!

By Swetha on வைகாசி 9, 2026

Spread the love

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழையானது வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியான சூழலை உருவாக்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

   

சென்னையைப் பொறுத்தவரை காலை முதலே நகரின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த சென்னை மக்களுக்கு இந்த திடீர் மழை பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இன்றும் நகரின் சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.