தமிழக தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகி ஐந்து நாட்களாகியும் அடுத்த முதல்வர் யார் என்பதில் நிலவும் இழுபறி தமிழக அரசியலில் பெரும் மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் நடிகர் விஜய் தனது அரசியல் நகர்வுகளைத் தீவிரப்படுத்தி முதல்வர் அரியணையை நோக்கி காய் நகர்த்தி வரும் வேளையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தனது பாணியில் தனி வியூகம் அமைத்துச் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, புதுச்சேரியில் தங்கியிருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று சென்னை திரும்புவது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
இவர்களுடன் இன்று சென்னையில் ஆலோசனை நடத்தவுள்ள இபிஎஸ், ஆட்சியமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் ஆதரவு திரட்டுவது குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பார் எனத் தெரிகிறது. விஜய்யின் அதிரடி முயற்சிகளுக்கு மத்தியில், அனுபவம் வாய்ந்த எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் இந்த ‘ரிசார்ட் அரசியல்’ மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்கும் முக்கியத் திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. என்ன நடக்கப்போகிறது என்பதைத் தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
