தவெகவிற்கு ஆதரவு இல்லை… விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… ஆளுநர் மாளிகையில் நள்ளிரவில் நடந்த செக் மேட்….!

By Nanthini on வைகாசி 9, 2026

Spread the love

தமிழக அரசியலில் முன் எப்போதும் இல்லாத வகையில் அரங்கேறியுள்ள இந்த நள்ளிரவு அரசியல் நாடகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனக்கு 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், அமமுக எம்.எல்.ஏ மன்னார்குடி காமராஜின் ஆதரவு கடிதம் போலியானது எனத் தெரியவந்துள்ளாது விஜய்க்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

“நான் அதிமுக கூட்டணிக்கு மட்டுமே ஆதரவு அளிக்கிறேன், விஜய்க்கு ஆதரவு அளிக்கவில்லை” என்று காமராஜ் ஆளுநரிடம் நேரில் ஆஜராகி அதிரடியாகத் தெரிவித்ததோடு, வாட்ஸ்அப் நகலை வைத்துத் தன்னை ஏமாற்ற முயன்றதாக விஜய் தரப்பு மீது குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சூழலை “அராஜகத்தின் உச்சம்” என வர்ணித்துள்ள டிடிவி தினகரன், போலி கடிதம் மற்றும் கடத்தல் புகார்களை முன்வைத்து விஜய்யின் அரசியல் நகர்வுகளைக் கடுமையாகச் சாடியுள்ளதுடன், இது ஒரு திட்டமிடப்பட்ட குதிரை பேரம் என்றும் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளார்.