BIG BREAKING: நாளை பதவியேற்பு விழா… விஜய்யின் சர்க்கார் அமைந்தது..!!

By Soundarya on வைகாசி 8, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து ஆட்சி அமைக்கத் தயாராகிவிட்டார். தவெக தனித்து 107 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் (5), சிபிஐ (2), சிபிஎம் (2) மற்றும் ஐயுஎம்எல் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மொத்தம் 118 இடங்கள் என்ற ‘மேஜிக் நம்பரை’  எட்டியுள்ளார். இது தமிழக அரசியலில் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு புதிய கட்சியின் தலைமையிலான அரசாங்கம் அமைய உள்ளதைக் காட்டுகிறது.

பெரும்பான்மை ஆதரவு கடிதங்களுடன் ஆளுநரைச் சந்தித்த விஜய், முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். இதனையடுத்து, அவர் நாளை (மே 9, 2026) காலை 11 மணிக்கு தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.