காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று சிங்கங்களைச் சிதறடித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தத் துணிச்சலான எருமைக் கூட்டம் சிங்கங்களின் பிடியில் சிக்கியிருந்த தங்கள் கூட்டாளியைக் காப்பாற்ற ஒரு ‘கேங்க்ஸ்டர்’ பாணியில் களமிறங்கி, சிங்கங்களையே திகைக்க வைத்துள்ளன.
வீடியோவின் தொடக்கத்தில், ஒரு தனி எருமையை நான்கு ஐந்து சிங்கங்கள் சேர்ந்து சுற்றி வளைத்துத் தாக்குவதைக் காண முடிகிறது. சில சிங்கங்கள் அதன் முதுகில் ஏறி கடிக்கின்றன, சில கால்களைப் பிடித்து இழுக்கின்றன. அந்த எருமை போராடிப் பார்த்தும் பலனளிக்காத நிலையில், எருமையின் கதி முடிந்துவிட்டது என்றே பார்ப்பவர்கள் கருதினர். ஆனால், திடீரென ஒரு டஜன் எருமைகள் புழுதி பறக்க அங்கே வந்து சேர்ந்து சிங்கங்களைத் தாக்கத் தொடங்க
View this post on Instagram
தங்கள் கூட்டாளியைக் காப்பாற்ற வந்த எருமைகள், சிங்கங்களை கால்பந்தைப் போலக் கொம்புகளால் முட்டி காற்றில் தூக்கி வீசின. எருமைகளின் இந்த அதிரடித் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ‘காட்டு ராஜாக்கள்’ உயிர்ப் பிழைக்க அங்கிருந்து தப்பியோடினர். “நண்பர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று இணையவாசிகள் இந்த வீடியோவைப் பகிர்ந்து எருமைகளின் ஒற்றுமையையும் வீரத்தையும் பாராட்டி வருகின்றனர்.
