தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு மிக நெருக்கமாகியுள்ளது. ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆதரவுக் கடிதம் வழங்கியிருந்த நிலையில், தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – CPM) தனது அதிகாரப்பூர்வ ஆதரவை அறிவித்துள்ளது. அக்கட்சியின் செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பெ.சண்முகம், மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்து தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார். இந்த இடதுசாரி கட்சிகளின் ஒருமித்த ஆதரவால் தவெக-வின் பலம் 116-ஆக அதிரடியாக உயர்ந்துள்ளது.
ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணை எட்ட இன்னும் வெறும் 2 இடங்கள் மட்டுமே தேவைப்படுவதால், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. பெரும்பான்மைக்கு மிக அருகில் தவெக வந்துள்ளதால், மீதமுள்ள 2 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற அக்கட்சி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நகர்வுகளால் தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், ஒட்டுமொத்த அரசியல் பார்வையும் தவெக-வின் அடுத்தகட்ட அறிவிப்பை நோக்கியே திரும்பியுள்ளது.
