தவெக-வில் திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி..? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

By Soundarya on வைகாசி 8, 2026

Spread the love

தமிழக அரசியலில் தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் (CPI மற்றும் CPI-M) தங்களது ஆதரவை உறுதி செய்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, விஜய்யின் மதச்சார்பற்ற கொள்கை மற்றும் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்து நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த ஆதரவின் மூலம் தவெக-வின் பலம் 114-ஆக உயர்ந்துள்ள நிலையில், ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மைக்கு (118 இடங்கள்) இன்னும் 4 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் தனது கட்சியின் இறுதி முடிவை இன்று மாலை அல்லது நாளை காலை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விசிக தவெக-வுடன் கைகோர்க்கும்பட்சத்தில், திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும், விஜய் ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறப்படும் திருச்சி கிழக்கு தொகுதியில் விசிக போட்டியிட வாய்ப்பளிக்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. விசிக-வின் இந்த முடிவு தமிழகத்தில் ஒரு புதிய கூட்டணி ஆட்சிக்கான தொடக்கமாக அமையும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.