விஜய்யின் போட்டோவை பார்த்து நேர்மையா நடந்துக்கோங்க… யாரும் துரோகம் பண்ணிராதீங்க… புஸ்ஸி ஆனந்த உருக்கமான வேண்டுகோள்..!!

By Soundarya on வைகாசி 8, 2026

Spread the love

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் தங்களின் ஆதரவு குறித்த முடிவை இன்று (மே 8) அறிவிக்கவுள்ளனர். இந்த இக்கட்டான சூழலில், தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது கட்சி எம்எல்ஏ-க்களுக்கு முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளார். விசிக மற்றும் இடதுசாரி எம்எல்ஏ-க்கள் நிச்சயம் தங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்றும், அதனால் யாரும் குழப்பமடைய வேண்டாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், எம்எல்ஏ-க்கள் எவ்வித ஆசை வார்த்தைகளுக்கும் அடிபணியக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். “உங்கள் முன்னால் 10 கோடி ரூபாயை யாராவது கொண்டு வந்து வைத்தால் கூட, தளபதி விஜய்யின் புகைப்படத்தைப் பார்த்து நேர்மையாகவும் விசுவாசமாகவும் நடந்து கொள்ளுங்கள்” என அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார். குதிரை பேரம் குறித்த அச்சம் நிலவும் சூழலில், புஸ்ஸி ஆனந்தின் இந்த அறிவுரை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.