BREAKING: +2 தேர்வு முடிவு.. 100க்கு 100 மதிப்பெண்கள்… மாணவர்கள் அசத்தல்..!!

By Soundarya on வைகாசி 8, 2026

Spread the love

தமிழகத்தில் வெளியாகியுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளின்படி, மாணவர்கள் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக, கணினி அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 6,945 மாணவர்கள் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் 2,099 மாணவர்களும், கணக்குப் பதிவியல் பாடத்தில் 1,946 மாணவர்களும் சதம் அடித்து அசத்தியுள்ளனர்.

மற்ற பாடங்களைப் பொறுத்தவரை, கடினமாக கருதப்படும் கணிதப் பாடத்தில் 732 பேர் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக, ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 16,024 ஆக உயர்ந்துள்ளது. இந்த முடிவுகள் மாணவர்களின் கடின உழைப்பையும், குறிப்பாகத் தொழில்நுட்பம் சார்ந்த பாடங்களில் மாணவர்களிடையே அதிகரித்துள்ள ஆர்வத்தையும் வெளிப்படுத்துகின்றன.