BIG BREAKING: முதல்வராகிறார் விஜய்… ஆளுநர் கொடுத்த க்ரீன் சிக்னல்… கோட்டையை நோக்கி தளபதி…!

By Nanthini on வைகாசி 7, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொறுப்பு ஆளுநர் அர்லேகரை இன்று இரண்டாவது நாளாக நேரில் சந்தித்து பேசினார். ஆளுநரின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த முக்கியத்துவமிக்க சந்திப்பில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஆட்சி அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆளுநர் சில விளக்கங்களைக் கேட்டறிந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் நகர்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், விஜய் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி அமைக்கத் தயாராக இருக்குமாறு ஆளுநர் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதனிடையே, ஆளுநருடனான இந்த அடுத்தடுத்த சந்திப்புகள் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.