BIG BREAKING: ஆளுநரை மீண்டும் சந்திக்கிறார் விஜய்… அடுத்தடுத்து பரபரப்பில் தமிழகம்..!!

By Soundarya on வைகாசி 7, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆளுநரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். நேற்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்த நிலையில், ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை குறித்த தெளிவான முடிவுகள் எட்டப்படவில்லை. இதனால் நிலவும் இழுபறி நிலையைத் தீர்க்கவும், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்கவும் இந்த இரண்டாவது சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்கள் இன்னும் கைவராத சூழலில், ஆளுநரின் அழைப்புக்காகக் காத்திருக்காமல் விஜய் மீண்டும் அவரைச் சந்திக்கப் புறப்பட்டுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது, சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் சட்டப்பூர்வமான அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்தச் சந்திப்பிற்குப் பிறகு தமிழக ஆட்சிக் கட்டிலில் அமரப்போவது யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகக்கூடும் என்பதால், ஒட்டுமொத்தத் தமிழகமும் ராஜ்பவனை நோக்கியே காத்திருக்கிறது.