ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க ஈரான் ‘காமிகாஸே டால்பின்க பயன்படுத்தக்கூடும் என்ற வியக்கத்தக்க தகவல் வெளியாகியுள்ளது. சோவியத் யூனியன் காலத்தில் ராணுவப் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்பட்ட இந்த டால்பின்களை, ஈரான் தனது கடற்படைத் தேவைகளுக்காகப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான குழுவினர் இது குறித்துத் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த டால்பின்கள் வெடிபொருட்களைச் சுமந்து சென்று எதிரிக் கப்பல்களைக் கண்டறிந்து மோதும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. நவீன ஆயுதங்களுடன் ஒப்பிடும்போது இது விசித்திரமாகத் தோன்றினாலும், கடலுக்கடியில் மறைந்துள்ள அச்சுறுத்தல்களைச் சமாளிப்பது அமெரிக்கக் கடற்படைக்கு சவாலாக இருக்கும் என ட்ரம்ப் தரப்பு எச்சரித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி உலகின் மிக முக்கியமான எண்ணெய் வர்த்தகப் பாதையாக இருப்பதால், இதுபோன்ற தற்கொலைப் படை டால்பின்களின் பயன்பாடு அந்தப் பிராந்தியத்தில் பெரும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஈரானின் இந்த ஆக்ரோஷமான மற்றும் அசாதாரணமான நடவடிக்கைகள், அமெரிக்காவுடனான மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
